BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
அண்ணா இந்தி படித்தாரா? பராசக்தியில் வரும் வசனத்தின் உண்மை என்ன?
பராசக்தி திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் வசனம் ஒன்றில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை கூட இந்தி கற்றார் எனச் சொல்லப்பட்டிருக்கும். இந்த கருத்து விவாதப் பொருளாகி இருக்கக்கூடிய நிலையில் அதன் உண்மை நிலை என்ன?
டிரம்பின் கிரீன்லாந்து அணுகுமுறை இந்தியாவுக்கு எவ்வாறு சாதகமாக மாறும்?
அமெரிக்கா தனது நட்பு நாடுகள் மீதே வரிகளை விதிக்கும்போது, வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்தியா அமெரிக்காவை முழுமையாக 'நம்ப' முடியாது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.
முன்னணி வீரர்கள் இருந்தும் இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்குக் காரணம் இதுவா?
ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா தவிர்த்து இந்திய அணியின் அனைத்து முன்னணி வீரர்களுமே இந்தத் தொடரில் இடம்பிடித்திருந்தார்கள். நியூசிலாந்து அணியிலோ பல்வேறு முன்னணி இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அப்படியிருந்தும் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்திருப்பது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்தத் தோல்விக்கான காரணங்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் அலசுவோம்.
இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா?
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவது போலத் தெரிந்தது. அமெரிக்கா இரான் தொடர்பாக ஒரு எச்சரிக்கையை வெளியிட்ட போது இந்த அச்சம் மேலும் அதிகரித்தது. வியாழக்கிழமை மாலைக்குள், மத்திய கிழக்கில் பதற்றம் தணிந்து வருவது தெளிவாகத் தெரிந்தது. அமெரிக்கா பின்வாங்க என்ன காரணம்?
நேரலை, பாஜக தேசிய தலைவர் பதவிக்கு ஒரு பெயர் மட்டுமே முன்மொழிவு
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம்.
'நல்ல சம்பளம், போட்டி குறைவு' - கப்பல் வேலையில் சேர்வது எப்படி?
கடற்படை துறை எதிர்காலத்தில் மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2047-ஆம் ஆண்டின்போது இந்த துறையில் 1.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
'விஜய் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கம்' - பிபிசி தமிழுக்கு கிருஷ்ணசாமி பேட்டி
"ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சி போலப் பார்க்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் நடக்கவிருக்கின்ற அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்று நான் கருதுகிறேன்.'' என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
'என்னுடைய 14 வயதில் என் திருமண சான்றிதழில் அம்மா கையெழுத்திட்டார்' - அமெரிக்காவிலும் குழந்தை திருமணங்கள்
அமெரிக்காவின் பல மாகாணங்களில் பெற்றோர் அல்லது நீதித்துறை அனுமதியின் மூலம் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கிறது, பெண்களின் கல்வியை பாதித்து, சட்டப்பூர்வமாக விடுபட முடியாத உறவுகளில் சிக்க வைக்கிறது
நம் உடலின் புரதத் தேவையை பூர்த்தி செய்ய இறைச்சி அவசியம் என்பது உண்மையா?
தாவரப் புரதங்கள் விலங்குப் புரதங்களைப் போலச் சிறந்தவை அல்ல என்று சமூக ஊடகங்கள் உங்களில் செய்திகள் பரவுகின்றன. அங்கு கிடைக்கும் தகவல்கள் குழப்பமானதாகவும் முரண்பட்டதாகவும் இருக்கக்கூடும் என்பதால் அவற்றை நீங்கள் நம்புவதில் வியப்பில்லை.
கிரீன்லாந்து: டிரம்பின் அறிவிப்பு நேட்டோ மற்றும் மேற்குலகில் பிளவுக்கு வித்திடுமா?
மேற்கத்திய நாடுகளுக்கு டிரம்ப் தற்போது விடுத்துள்ள அச்சுறுத்தல் முன்னெப்போதும் நிகழ்ந்திராதது.
இரானில் போராட்டம்: ரகசிய மறைவிடத்தில் தங்கியுள்ள காமனெயி அடுத்து என்ன செய்யலாம்?
இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சமீப நாட்களாக தனது ரகசிய மறைவிடத்தில் தங்கி வருகிறார். அவர் அதிகாரத்திலிருந்து நீக்கப்படுவது இரானின் எதிர்காலத்தின் மீது எத்தகைய தாக்கம் செலுத்தும் என்பது தெளிவாக இல்லை. இந்தச் சூழலில் இரானின் அதிஉயர் தலைவருக்கும் அவரின் அரசுக்கும் உள்ள வாய்ப்புகள் என்ன?
இயந்திர மனிதர்கள், நிலவில் தளம்; 2050-ல் உலகம் எப்படி இருக்கும்?
கடந்த 25 ஆண்டுகளில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதேபோல, அடுத்த 25 ஆண்டுகளில் எத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்படப் போகின்றன. 2050இல் உலகம் எப்படி இருக்கப் போகிறது?
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'பாலிவுட்டில் வெளியாள் போல் உணர்ந்தேன்' – பிபிசிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
ஆஸ்கர், கிராமி, கோல்டன் குளோப் உள்படப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார். இந்த நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்ட முக்கிய விஷயங்கள் என்ன?
மார்பில் படுத்திருந்த மலைபாம்பு - நள்ளிரவு கண் விழித்த பெண் தப்பியது எப்படி?
இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது விழித்த ரேச்சல் ப்ளூர் தன் மார்பின் மேல் ஏதோ ஒரு கனமான பொருள் சுருண்டு கிடப்பதைக் கவனித்தார், அது பிரம்மாண்டமான பாம்பு! அந்த அனுபவம் எப்படி இருந்தது தெரியுமா?
கோவிலுக்குச் சொந்தமான மரத்தில் பிறை கொடியா? திருப்பரங்குன்றம் மலையில் அடுத்த சர்ச்சை
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள மரத்தில் பிறை கொடியைக் கட்டியதால் என்ன பிரச்னை? கோவில் நிர்வாகம் மற்றும் தர்கா தரப்பு சொல்லும் விளக்கம் என்ன?
இரான் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் ஏன் பிளவுபட்டுள்ளன?
1979 புரட்சிக்குப் பிறகு, அமெரிக்காவுக்கு தொடர்ந்து சவால் விடும் பிராந்தியத்தின் ஒரே நாடாக இரான் இருந்து வருகிறது. மற்ற இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளாக இருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.
பி.இ மற்றும் பி.டெக் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
இந்த இரண்டு வெவ்வேறு படிப்புகளுக்குப் பின்னால் என்ன தர்க்கம் இருக்கிறது? இந்த பட்டங்கள் உண்மையில் ஒன்றா, அல்லது படிப்பு முறை, படிப்பு அணுகுமுறை அல்லது நோக்கத்தில் வித்தியாசம் உள்ளதா? கரியர் கனெக்ட் தொடரின் இந்த அத்தியாயத்தில், இரண்டு படிப்புகளையும் படித்தவர்கள் மற்றும் கற்பித்தவர்கள் மூலம் இந்த குழப்பத்தை தீர்க்க முயற்சிப்போம்.
அடர் வனத்தில் தனியே வசிக்கும் குடும்பம் - வெளியாட்களை கண்டால் ஓடி ஒளியும் குடும்பத்தலைவர்
தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கோத்தகுடேம் மாவட்டத்தின் அஸ்வராவ்பேட் மண்டலத்தில் உள்ள ஒரு உயரமான மலையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் மூன்று பேர் கொண்ட ஒரு பழங்குடி குடும்பம் கடந்த ஆறு ஆண்டுகளாக வசித்து வருகிறது.
இஞ்சியின் முழு பலன்களை பெற அதை நம் உணவில் எவ்வாறு சேர்க்க வேண்டும்?
தெற்காசியா முழுவதும் பரவலாக அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்டது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதனால் கிடைக்கும் நம் உடலுக்குக் கிடைக்கும் மருத்துவ பயன்கள் என்னென்ன?
பாகிஸ்தான், செளதி, துருக்கி மூன்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்தால் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?
"துருக்கியின் வருகை இந்தியாவின் கவலையை அதிகரிக்கும். பாகிஸ்தானும் துருக்கியும் ஏற்கனவே வெளிப்படையாக இந்தியாவிற்கு எதிராக உள்ளன. இதில் செளதி அரேபியா இந்தியாவுடன் ஆழ்ந்த உறவைக் கொண்ட நாடாகும். எனவே செளதி அரேபியா இதை எவ்வளவு தூரம் இந்திய எதிர்ப்பு போக்காக மாற்ற அனுமதிக்கும் என்பது முக்கியமானது"
"பல் துலக்கும்போது வெடித்த கழுத்து ரத்தக்குழாய்" - அரிதான நிகழ்வுக்கு என்ன காரணம்?
இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளம் வெடிப்பது என்பது மருத்துவ உலகில் மிகவும் அரிதானதாக பார்க்கப்படுகிறது. இத்தகைய பிரச்னையை சந்தித்த நபர் அதிலிருந்து காப்பாற்றப்பட்டது எப்படி?
மதுரோ கைது மற்றும் 'ரஷ்ய' கப்பல் சிறைபிடிப்புக்கு பதிலடி தராமல் புதின் மௌனம் காப்பது ஏன்?
இந்தக் கட்டுரை 2026-ன் தொடக்கத்தில் நிலவும் மிக முக்கியமான புவிசார் அரசியல் மாற்றத்தை விளக்குகிறது. அமெரிக்காவின் 'அதிகார ஆட்டத்தை' ரஷ்யா தனது யுக்ரேன் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறதா என்பதே இதன் சாராம்சம்.
விருமாண்டி, விசில் என தமிழ் சினிமாவில் நாட்டார் தெய்வங்கள் எவ்வாறு காட்டப்பட்டுள்ளன?
தமிழ்நாட்டில் நாட்டார் தெய்வங்கள் குறித்த கதைகள் அதிகம் உள்ள போதிலும், திரைப்படங்களில் அவை எந்தளவு கையாளப்பட்டுள்ளன
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



























































































